குரோசியா வீரர் மரியோ மாண்ட்சுகிச் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு.

குரோசியா கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மரியோ மாண்ட்சுகிச். ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் குரோசியா 2-4 எனத் தோல்வியடைந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டியில் மாண்ட்சுகிச் 2-வது கோலை தன் அணிக்காக பதிவு செய்தார். 11 வருடமாக குரோசியா அணிக்காக விளையாடி வரும் மாண்ட்சுகிச் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் உள்ள யுவான்டஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், குரோசியா அணிக்காக 89 போட்டிகளில் விளையாடி 33 கோல்கள் அடித்துள்ளார். இரண்டு உலகக்கோப்பை மற்றும் மூனறு ஐரோப்பா சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் விளையாடியுள்ளார்.