IBC Tamil Radio - Listen to Music Online | Live Tamil Radio

நீங்கள் அறிய என்னும் இதர தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

எங்கள் வலைத்தளங்களில்

எங்கள் தொகுப்பாளர்கள்

தொகுப்பாளர்களை தேர்வு செய்து அவர்களுது நிகழ்ச்சிகளை கேளுங்கள்.

Gowri

Pavithra

Sutharshan

MP Arokiyanathan

SK Rajen

shathiesh

Kogulan

Parthi

Inthu

Sam Pratheepan

வானொலி அட்டவணை

சமீபத்திய செய்திகள்

ஐபிசி செய்திகள்

அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களே மனித படுகொலைகளுக்கு காரணம்

May 26,2017   268 Views

யுத்தம் காரணமாக அரசாங்கத்துடன் இணைந்திருந்த ஆயுதக் குழுக்கள் மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டதாக சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்வாறான நிலையில் ஒரு சில அரசியல் வாதிகள் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பிச்சையெடுத்து வடமாகாணத்தின் கல்வியை சீர்குலைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவின் கோடிக்கரையை கடந்து கின்னஸ் சாதனை படைத்த ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை ரேவடி கடற்கரையில் நீச்சல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாணத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீள இயக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

இனங்களுக்கு இடையே காணப்படும் வேற்றுமை நச்சு விதையென்கிறார் விக்னேஸ்வரன்

May 26,2017   176 Views

இனங்களுக்கு இடையில் காணப்படும் தவறான சிந்தனைகளை மாற்றினால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையே காணப்படும் வேற்றுமை உணர்வுகளும், சச்சரவுகளும் அரசியல்வாதிகளாலும் பிற்போக்கு சிந்தனையாளர்களாலும் விதைக்கப்பட்ட ஒரு நச்சு விதையெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணை வழியாக இந்தியாவின்  கோடிக்கரையை கடந்து கின்னஸ் சாதனை படைத்த  ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவாக யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை ரேவடி கடற்கரையில் நீச்சல் தடாகம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது இந்த நீச்சல் தடாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இனங்களுக்கு இடையில் காணப்படும் வேற்றுமை உணர்வினை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

போயஸ்கார்டன் வீட்டை விட்டுத்தரமாட்டேன்-அதிரவைக்கும் தீபா.!

May 26,2017   12 Views

மறைந்த முதல்வரும்,தனது அத்தையுமான ஜெயலலிதா அவர்களுக்கு சொந்தமான வீடான போயஸ்கார்டன் வீட்டை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டுத்தரமாட்டேன் என 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' தலைவர் தீபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது  "புரட்சித் தலைவி வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை திடீர் ஞானோதயமாக நினைவு இல்லமாக மாற்றப் போவதாக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தொண்டர்களை ஏமாற்ற அரசு செய்த போலி ஏமாற்று நாடகமாகும். அம்மாவின் சமாதியை இதுவரை கட்ட முயற்சி செய்யாதவர்கள் அம்மா மறைந்து 6 மாதம் ஆகியும் தலைமைக் கழகத்தின் சார்பில் படத்திறப்பு நிகழ்ச்சி கூட நடத்த முன்வராதவர்கள் நினைவு இல்லம் பற்றி தீர்மானம் நிறைவேற்ற என்ன யோக்கியதை இருக்கிறது?  அம்மாவின் சமாதியை, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையில் இருக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூவியபோதும் அரசு அலுவலகங்களில் அம்மாவின் படம் இருக்க கூடாது என்று எதிரிகள் கூக்குரலிட்ட போதும் அவர்களை எதிர்த்து பேசாமல் மவுனச்சாமியார்களாக இருந்த அமைச்சரவை கூட்டம் தீர்மானத்தை தொண்டர்களும், நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனவும், தமது தவறுகளை மறைத்து பொதுமக்களிடம் ஆதாயம் தேட சசிகலா பினாமி எடப்பாடி அரசு முயல்வதாகவும் தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

சோனியா தலைமையில் தில்லியில் ''குடியரசுத் தேர்தல்'' குறித்து- அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்.!

May 26,2017   6 Views

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைந்ததை தொடர்ந்து மோடி தலைமையில் மத்தியில்  ஆட்சியமைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து வந்த பிற மாநிலங்களுக்கான சட்டபேரவை தேர்தல்களிலும் பெரும்பான்மையளவில் பாஜகவே வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில்,இன்னும் சிறிது காலத்திற்குள் வரவிருக்கிற குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக வினை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து இன்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

எடப்பாடி அரசின் 100 நாள் சாதனை பட்டியல் வெளியீடு- விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்.!

May 26,2017   6 Views

முன்னாள் முதல்வரும்,அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எனவும் அக்கட்சியின் தொண்டர்களால் கூறப்பட்ட ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அக்கட்சி பல்வேறு அரசியல் சுழலில் சிக்கியது.இறுதியை முதல்வர் பதவியானது தற்போதைய முதல்வர் எடப்பாடி அரசின் கரங்களில் வந்து சேர்ந்தது. அவர் முதல்வராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி அவரது 100 நாட்கள் ஆட்சியின் சாதனைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.அதில் "மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது, மீனவர்களுக்கு 5 ஆயிரம் வீடுகள் கட்ட உத்தரவிட்டது, மேலும் உழைக்கும் மகளிர் இருசக்கர வாகனம் வாங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, வேலையில்லாத இளைஞர்களின் மாத உதவித் தொகை இருமடங்காக உயர்வு ஆகியன இடம்பெற்றுள்ளன. தமது ஆட்சியை காக்க மக்கள் நலனை மத்திய பாஜக அரசிடம் அடகு வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என பிற கட்சிகள் குற்றம் சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.