மக்களுக்கு இனிமேல் மின்குமிழ் நிவாரணம்!

இலங்கை மக்களுக்கு எல்.ஈ.டி மின் குமிழ்கள் நிவாரண கடன் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை தரப்பு எரிசக்தி முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைந்த மின் பாவனையை கொண்ட பாவனையாளருக்கு மத்தியில் செயல்திறன் மிக்க எல்.ஈ.டி மின்குமிழ்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக நிவாரண கடன் திட்டத்தின் கீழ் மின்குமிழ்களை விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த திட்டத்திற்காக 10 லட்சம் led மின் குமிழ்கள் வீதம் 10 தொகுதிகளில் 1 தொகுதிக்கு 169.6 மில்லியன் ரூபாவுக்கு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்வனவு சிபாரிசுக்கு அமைய வியட்நாமின் ms rang dong Light source and vacuum falask நிறுவனத்திடம் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் நாட்டின் மின்சார சிக்கனத்தைப் பேணுவதற்குரிய வழியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.