தெரிவுக் குழு வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகரின் அறிவிப்பு!

மீண்டும் நாடாளுமன்றம் 27 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று காலை இடம்பெற்றகட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பில்இறுதி முடிவு எட்டப்படவில்லை.

எனினும் சபாநாயகர்கரூ ஜயசூரியவினால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்றுகாலை சபை அமர்வு ஆரம்பமான போது வாசிக்கப்பட்டது.

அதனடிப்படையில் ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தலா 5 உறுப்பினர்களும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தலா 1 உறுப்பினரின் எனமொத்தமாக 12 உறுப்பினர்களிக் பெயர்கள் வாசிக்கப்பட்து. எனினும் மஹிந்த தரப்பினர்அதனை பகிஷ்கரிப்பு செய்வதாக கூறி சபையினை விட்டு வெளிநடப்பு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.